எங்கே போகிறோம் !!!!!!!!
கலிகால உலகம் வந்தாச்சு கடவுளே !!!!!!
இப்பொழுது நீ கடவுள் இல்லையாம் , காசு தான் கடவுளாம்
இக்கால மனிதன் ,
உயரிய பண்பினைக் கொண்டேன் என்கிறான்,
ஆனால் உதவியவன் நன்றியை மறந்து விடுகிறான்,
இளகிய உள்ளம் படைத்தவன் என்கிறான்,
ஆனால் சாலையில் சாகக் கிடப்பவனைக் கண்டும் காணமல் செல்கிறான்.
வெங்காயம் உரித்தால் கண்ணீர் வருகிறது,
ஆனால் உறவினன் இறந்தால் இரங்கல் மட்டும் தான் வருகிறது,
காடுகளும் மலைகளும் கட்டிடங்களாயின,
கொலைகளும் கொள்ளைகளும் வாடிகையாயின.
கடமை, கண்ணியம் கட்டுப்பாடு என்கிறான்,
ஆனால் கடமையைச் செய்ய லஞ்சம் வாங்குகிறான்,
பணமும் புகழும் சம்பாதிக்க உன்னை வழிபடுகிறான்,
நாலு பேர் நம்பினால் - நானே கடவுள் என்கிறான் !.
பணம் பதவி என்பது அத்தியாவசியமானது,
மனிதாபிமானம், இரக்கம் என்பது அனாவசியமானது,
வீடும் அலுவலகமும் கண்கவர் வகையில் சுத்தமானது,
ஆனால் சாலையும் சுற்றுப்புறமும் சீர்கேடானது.
என் கடன் பனி செய்து கிடப்பதே என்கிறான்,
கூறிவிட்டு ஐந்து வருடம் கழித்து திரும்புகிறான்,
வீட்டிற்கு வருபவள் மகாலட்சுமி என்கிறான்,
வரதட்சணையில் எள்ளளவு குறைந்தாலும் மகாலட்சுமிக்கு வீட்டில் இடமில்லை.
பச்சிளம் குழந்தை பசியால் வாடித் தவிக்கிறது,
அடுத்த வீதியில் திரைப்பட நடிகன் படத்திற்கு பாலாபிஷேகம் நடக்கிறது,
சாஸ்திரமும் சம்பிரதாயமும் சௌகரியத்திற்கேற்ப மாறியது,
பண்பாடும் கலாச்சாரமும் மறைந்தே போனது.
முதலில் பணத்திற்காக உடல் நலத்தை இழக்கிறான்,
பின்பு உடல் நலத்திற்காக பணத்தை இழக்கிறான்.
செம்மொழியான தமிழ்மொழி என் உயிர் மொழி என்கிறான்,
ஆனால் தம் பிள்ளைகளை Daddy என்று அழைக்கச் சொல்கிறான்.
கல்விச் சேவைக்காகவே கல்வி மையம் என்கிறான்,
ஆனால் பிள்ளைகளைச் சேர்க்க சொத்தை எழுதிக் கேட்கிறான்.
கௌரவத்திற்காக ஹோட்டலில் சர்வருக்கு டிப்ஸ் கொடுக்கிறான்,
வழியில் ஊணமுற்ற பிச்சைக்காரனுக்கு சில்லறை இல்லை என்கிறான்.
விஞ்ஞான சாதனைகள் வளர்ந்து கொண்டே போகிறது,
ஆனால் பரிணாம வளர்ச்சி குறைந்து கொண்டே போகிறது.
இயற்கையும் மருத்துவமும் ரசாயனமானது,
காற்றும் நீரும் மாசுபட்டுப் போனது.
கடவுளே
உன் சிலையையும் திருடி நாடு கடத்துகின்றனர்
நீர் இங்கு வந்தால் ,
.
.
.
உம்மையும் கடத்துவர்
விழித்துக்கொள் கடவுளே விழித்துக்கொள் !!!!!!
இனியாவது நல்லவர்களை உன்னிடம் அழைத்துக்கொள்
இல்லையெனில்
அவரும் சாக்கடையில் விழுந்த பன்னீர் ஆவர்.
"தமிழ் இனி மெல்லச் சாகும்" என்றான் கவிஞன்
தமிழ் மட்டுமல்ல
…..
..
...
..
...
..
..
...
..
...
..
நல்ல உள்ளங்களும் தான் ...
இத்தொகுப்பு முடிந்தாலும், மாற்றம் விடிய சபதம் கொள்வோம்
வாழ்க பாரதம் “ வளர்க இந்தியா ”